முகப்பு
செய்திகள்

கேப்டன் மில்லர் டிரைலர் அப்டேட்!

நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:24 PM
பகிர்:

அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு  கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தனர். அதிரடி காட்சிகளால் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், யூடியூப்பில் 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.  இப்படம் வருகிற ஜன. 12 ஆம் தேதி வெளியாகிறது.

கேப்டன் மில்லரின்  முன் வெளியீட்டு விழா ஜன.3ஆம் தேதி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

இந்நிலையில், படத்தின் டிரைலர் நாளை (ஜன.6) சன் டிவி யூடியூப் பக்கத்த்ல் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.