செய்திகள்

வெளியானது அர்ஜுன் தாஸ் நடிக்கும் ரசவாதி பட டீசர்

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ரசவாதி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

DIN

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ரசவாதி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 
கைதி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் அர்ஜுன் தாஸ். தொடர்ந்து, வசந்த பாலன் இயக்கிய அநீதி படத்தில் அவர் நாயகனாக அறிமுகமானார். தற்போது அவர் ரசவாதி படத்தில் நடித்து வருகிறார். இதனை இயக்குநர் சாந்தகுமார் இயக்கி வருகிறார். 
இவர் இதற்கு முன்பு மௌனகுரு, மகாமுனி ஆகிய படங்களை இயக்கியவர். இந்த படத்தில் நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் சுஜிதா சங்கர், சுஜாதா, விஜே ரம்யா சுப்ரமணியன், ரேஷ்மா வெங்கடேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்துக்கு தமன் இசையமைக்கிறார். 
படத்தை டிஎம்ஏ மெக்கானிக் கம்பெனி தயாரிக்கிறது. இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலையில் சிக்கிய 150 கிலோ எடை ஆமை: கடலில் விட்ட மீனவர்

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

SCROLL FOR NEXT