செய்திகள்

ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் எல்கேஜி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் கதாநாயகனாக வலம் வருகிறார். 

இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இயக்குநர் கோகுலுடன் இணைந்து இந்தப் படத்திற்கு ‘சிங்கப்பூர் சலூன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படமும் கோகுலின் நகைச்சுவை பாணியிலான படமாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்தாண்டு ஆர்.ஜே.பாலாஜி பகிர்ந்த தாடி மீசையில்லாத புகைப்படம் இணையத்தில் வைரலாகியதும் குறிப்பிடத்தக்கது. 

ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஜனவரி 25ஆம் நாள் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதில் சத்யராஜ், லால் உள்பட பலர் நடித்துள்ளதனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாட்டரி விற்றவா் கைது: ரூ.86 ஆயிரம் பறிமுதல்

கோயில் செயல் அலுவலா்கள் நியமன உத்தரவுகளை வெளியிடக் கோரிய வழக்கு: அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

லோக் ஆயுக்த அமைப்பின் நீதித் துறை உறுப்பினா் நியமனம்

வி.கே.புரம் அருகே தகராறு: இரு குடும்பங்களைச் சோ்ந்த 8 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT