செய்திகள்

ஸ்பெயின் கலைஞர்களுடன் இணைந்த இசைவாணி, சரவெடி சரண்!

ஸ்பெயின் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடிய சார்பாட்ட பரம்பரை பட பாடகி இசைவாணியின் பாடல் கவனம் பெற்றுள்ளது. 

DIN

பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் வம்புல தும்புல பாடல் பாடியவர்களுல் ஒருவர் பாடகி இசைவாணி. கானா பாடல்கள் பாடுவதில் புகழ்பெற்றவர். 

ஜான் ஏ. அலெக்ஸிஸ் இசையமைப்பில் கவிஞர் கபிலன் வரிகளில் இசைவாணி மற்றும் சரவெடி சரண் இணைந்து பாடியிருக்கும் "குக்குரு குக்குரு " பாடல் சமீபத்தில் வெளியானது.

இசையமைப்பாளர் ஜான் ஏ. அலெக்ஸிஸ் இசையயில் கவிஞர் கபிலன் பாடல் எழுதியிருக்கும் இந்த பாடல் கானா பாடல் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

திரைப்படங்களுக்கு இசையமைத்துவரும் ஜான் ஏ. அலெக்சின் தனியிசைப் பாடல்களுக்கு வரவேற்பு உள்ளதால் தொடர்ந்து தனியிசைப்பாடல்கள் உருவாக்குவதில் கவனம் செலுத்திவருகிறார்.

உலகம் முழுவதும் சினிமாப் பாடல்களுக்கு இருக்கும் வரவேற்பை போல தனியிசைப்பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றுவருவதும் தொழில் நுட்பம் வளர்ந்து வருவதும் இசைத்துறையில்  புதிய இசையமைப்பாளர்கள் உருவாவதற்கு  எளிதாகவும் இருக்கிறது என்கிறார் இசையமைப்பாளர் ஜான் A அலெக்சிஸ்.

குக்குரு குக்குரு கானா பாடலை ஸ்பெயின் நடனக்கலைஞர்களோடு பாடகி இசைவாணி மற்றும் சரவெடி சரண் இணைந்து பாடலுக்கு  நடனமாடியுள்ளனர்.

இந்த பாடல் யூடியூப்பில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலிவுட்டிலும் கலக்கல்! ரூ. 150 கோடி வசூலித்த தேரே இஷ்க் மே!

அவர்கள் குழந்தைகளாக இருக்கட்டும்!

தந்தைக்குச் சிலை முக்கியமா? அரசுப் பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா? - முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

தாய்லாந்து - கம்போடியா மக்களின் துயரம்!

தீயவர் குலை நடுங்க படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT