முகப்பு
செய்திகள்

தக் லைஃப் படத்தில் ஜோஜு ஜார்ஜ்!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 13 ஜூன், 2024 at 7:20 AM
பகிர்:

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

இதையும் படிக்க: ஆடு ஜீவிதம் போஸ்டர்!

தக் லைஃப் அறிமுக விடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜோஜு ஜார்ஜ் தமிழில் ஜகமே தந்திரம், புத்தம் புது காலை விடியாதா, பஃபூன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

தக் லைஃப் படத்தில் நடிகர் துல்கர் சல்மானும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், நடிகர் கௌதம் கார்த்திக்கும் இப்படத்தில் நடிக்க உள்ளதைத் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →