செய்திகள்

ரசிகர்கள்தான் எனக்கு அப்பா, அம்மா: நடிகர் மகேஷ் பாபு உருக்கம்!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு குண்டூர் காரம் படத்தின் முன் வெளியீட்டு விழாவில் உருக்கமாக பேசிய விடியோ வைரலாகியுள்ளது. 

DIN

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. பிரபல தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் குண்டூர் காரம் படத்தில் நடித்து வருகிறார்.

எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தில் தமன் இசையமைத்துள்ளார்.  நடிகைகள் ஸ்ரீ லீலா,  மீனாக்‌ஷி சௌத்ரியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்திலிருந்து இசையமைப்பாளர் தமன், நடிகை பூஜா ஹெக்டே விலகியுள்ளதாக தகவல் வெளியானதும் பின்னர் பூஜா ஹெக்டே மட்டும் விலகியதாக தகவல்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. 

வரும் 12-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் நான்கு பாடல்கள் வெளியான நிலையில் 3வது பாடலில் ஸ்ரீலீலா- மகேஷ் பாபு நடனம் இணையத்தில் வைரலானது.

நேற்று குண்டூரில் நடைபெற்ற முன் வெளியீட்டு விழாவில் நடிகர் மகேஷ் பாபு உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது: 

இந்தப் படத்தில் புதிய மகேஷ்பாபுவை பார்ப்பீர்கள். இதனை வேண்டுமென்றே சொல்லவில்லை. த்ரிவிக்ரம் அவர்களுடன் இணைந்தால் ஏதோ மேஜிக் நடக்கிறது. இந்த முறை அப்பா இல்லை. அதனால் என்னவோ புதியதாக இருக்கிறது. அவர் பாக்ஸ் ஆபிஸ் குறித்து பேசுவார். இனிமேல் நீங்கள்தான் அதைக் கூற வேண்டும். இனி நீங்கள்தான் எனக்கு அப்பா, அம்மா எல்லாமே. 

எப்போதும் சொல்வதுபோல இந்த அன்புக்கு கையெடுத்து கும்பிட்டுக் கொள்கிறேன். எப்போதும் இந்த அன்பும் ஆசிர்வாதமும் எனக்கு கிடைக்க வேண்டிக்கொள்கிறேன் எனக் கூறினார். 

ரசிகர்கள் இணையத்தில் நான் இருக்கிறேன் அண்ணா உங்களுக்கு என உருக்கமாக பதிவிட்டு வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவா்களின் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம்!

வெளிமாநிலத்தவருக்கு தமிழகத்தில் வாக்காளா் அட்டை வழங்கக்கூடாது

சம்பட்டிமடை கிராமத்துக்கு சாலை அமைக்காததைக் கண்டித்து போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு

கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியல்

முதிய தம்பதியை தாக்கி கொள்ளை: இருவா் கைது

SCROLL FOR NEXT