செய்திகள்

சேரனின் ஜர்னி முதல் ஜோ வரை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

சேரனின் ஜர்னி முதல் ரியோ ராஜின் ஜோ வரை, இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

DIN

சேரனின் ஜர்னி முதல் ரியோ ராஜின் ஜோ வரை, இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

அறிமுக இயக்கநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'ஜோ'. இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜன. 15 ஆம் தேதி வெளியாகிறது.

சேரன் இயக்கியுள்ள சேரன்ஸ் ஜர்னி என்ற வெப்  தொடர் ஜனவரி 12 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதில் சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், கலையரசன், திவ்ய பாரதி உள்ளிட்டோர் பிரதான வேடத்தில் நடித்துள்ளார்கள். 

சுதிப்தோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த மே 5 ஆம் தேதி வெளியான நிலையில், ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் ஜன. 12 ஆம் தேதி வெளியாகிறது.

பிக் பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவி, ரிஷிகாந்த், ராஜாமணி உள்ளிட்டோர் நடித்த சிவப்பி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஜன. 12 ஆம் தேதி வெளியாகிறது. மேலும், டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபுள் திரைப்படம் அமேசான் ப்ரைமில் ஜன. 11-ல் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT