செய்திகள்

கேப்டன் மில்லர்: அருண்ராஜா காமராஜ் குரலில் வெளியான தீயான பாடல்!

இயக்குநரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் குரலில் கேப்டன் மில்லர் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. 

DIN

ராக்கி, சாணிக் காயிதம் படங்களின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். 17 வருடங்களாகப் போராடி தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியவர். 

தற்போது நடிகர் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தினை இயக்கி இருக்கிறார். இந்தப் படம்  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. வெளிநாடுகளில் லைகா புரடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தினை வெளியிடுகிறது. 

உலக அளவில் 900-க்கும் அதிகமான திரைகளில் வெளியாக இருக்கிறது. இதுதான் தனுஷ் படங்களில் பிரமாண்ட ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் மில்லரின் எழுச்சி எனும் பாடல் வெளியாகியுள்ளது. 

அருண்ராஜா காமரா எழுதி பாடியுள்ள இந்தப் பாடல் உணர்ச்சி மிகுந்ததாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்டுகளில் கூறிவருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT