முகப்பு
செய்திகள்

மம்மூட்டியின் பிரமயுகம் படத்தின் மிரட்டலான டீசர்!

மம்மூட்டி நடித்துள்ள 'பிரமயுகம்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:21 PM
பகிர்:

மம்மூட்டி நடித்துள்ள 'பிரமயுகம்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் மம்மூட்டியின் நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது மம்மூட்டி பிரமயுகம் படத்தில் நடித்து முடித்துள்ளார். 'பிரமயுகம்' படத்தினை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தினை ஆல் நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்நாட் ஸ்டுடியோஸ் வழங்குகிறது. 

பூதகாலம் படத்தை இயக்கி கவனம் பெற்ற ராகுல் சாதசிவனுடன் மம்மூட்டி இணைந்தது பெரிதாகப் பேசப்பட்டது.  ‘பிரம்மயுகம்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளதாக படக்குழு முன்னதாக அறிவித்து இருந்தது.

இந்நிலையில், நடிகர் மம்மூட்டி முற்றிலும் மாறுபட்ட கதையில் 'பிரமயுகம்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →