செய்திகள்

பிக்பாஸ் வெற்றியாளர் இவரா?

பிக்பாஸ் சீசன் -  7 வெற்றியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பிக்பாஸ் 7-வது சீசன் இறுதிநாளை எட்டியுள்ளது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற போட்டிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில்  கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, பவா செல்லத்துரை, விசித்ரா, மாயா, நிக்சன் உள்பட 18 பேர் போட்டியாளர்களாக களம் இறங்கினர். ஒரு மாதம் கழித்து அர்ச்சனா, தினேஷ், அன் பாரதி, கானா பாலா, பிராவோ ஆகிய 5 பேர் வைல்டு கார்டு என்ட்ரியில் உள்ளே நுழைந்தனர். இதனால், இந்த சீசன் பெரிதாகக் கவனிக்கப்பட்டது. 

இறுதிச்சுற்றில் அர்ச்சனா, மாயா, விஷ்ணு, மணி, தினேஷ் ஆகியோர் போட்டியிட்டு வந்தனர். 

இந்நிலையில், தற்போது நடந்துகொண்டிருக்கும் இறுதிப்போட்டி முடிவுகளை கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார். இதில், பிக்பாஸ் வெற்றியாளராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இரண்டாமிடத்தை மணியும் மூன்றாவது இடத்தை மாயாவும் பெற்றிருப்பதாகத் தகவல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவே... தர்ஷனா பனிக்!

அலையே... ஆஷு ரெட்டி!

என் மன வானில்... சான்வே மேகானா!

இன்னும் 100 நாள்களில் வெளியாகும் பராசக்தி - புது போஸ்டர் வெளியீடு!

கரூர் பலி: காவல்துறைக்கு நன்றி சொல்ல வேண்டும்! - கமல்ஹாசன்

SCROLL FOR NEXT