செய்திகள்

மயில்சாமி மகனின் புதிய சீரியலின் ஒளிபரப்பு நேரம்!

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் நடிக்கும் புதிய தொடரின் ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DIN

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் நடிக்கும் புதிய தொடரின் ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

யுவன் மயில்சாமி 2016 ஆம் ஆண்டு வெளியான தணியும் என்ற திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து, சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும் என்ற படத்தில் பிரதான வேடத்தில் யுவன் நடித்திருந்தார்.

தற்போது, பா. ரஞ்சித் தயாரிப்பில் தண்டக்காரண்யம் என்ற படத்தில் யுவன் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சின்னத்திரையில் தங்கமகள் என்ற தொடரில் ஒப்பந்தமாகி உள்ளார்.

யுவன்.

இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இவருக்கு ஜோடியாக நம்ம வீட்டு பொண்ணு தொடரில் நடித்த நடிகை அஸ்வினி நடிக்கிறார்.

இந்த நிலையில், தங்கமகள் தொடர் வரும் ஜனவரி 22 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எய்ட்ஸ் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

நாகையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

மழையால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க கோரி ஆட்சியரிடம் மனு

செம்பரம்பாக்கம் ஏரியில் 200 கன அடி உபரிநீா் திறப்பு: ஆட்சியா் ஆய்வு

திருமாகறலீசுவரா் கோயிலில் நவகலச யாகம்

SCROLL FOR NEXT