முகப்பு
செய்திகள்

மறுவெளியீடுக்குத் தயாரான தீனா!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவான தீனா படம் மறுவெளியீடாக திரைக்கு வர உள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:19 PM
பகிர்:


இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான தீனா திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

தொடர் தோல்விகளில் இருந்த அஜித்துக்கு வசூல் ரீதியாகவும் கைகொடுத்த திரைப்படம் தீனா. இதில் சுரேஷ் கோபி, லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இடம்பிடித்தது. 

இந்நிலையில், இப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆனதாலும் ரசிகர்களின் வேண்டுகோளுக்காகவும் டிஜிட்டல் மெருகேற்றல் செய்யப்பட்ட பிப்ரவரி மாதம் மறுவெளியீடு செய்யப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →