செய்திகள்

சாய் பல்லவியின் தங்கைக்கு திருமணம்!

சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

DIN

சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

நடிகை சாய் பல்லவிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பிரேமம் படத்தில் அவர் நடித்ததன் மூலம் தென்னிந்தியா  முழுவதும் கவனம் பெற்றார்.

சாய் பல்லவியின் சகோதரியான நடிகை பூஜா கண்ணன் தமிழில் வெளியான சித்திரை செவ்வாணம் படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

இந்த நிலையில், பூஜா கண்ணன் அவரது திருமணம் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், "இதுவரை என்னுடைய க்ரைம் பார்ட்னராக இருந்த  வினீத். இனி என் வாழ்க்கைத் துணையாக இருக்கப் போகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவில் பூஜா கண்ணன், வினீத்துடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும்  வெளியிட்டுள்ளார். இப்பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

SCROLL FOR NEXT