நடிகர் சந்தானம் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய விடியோவை சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அந்த விடியோவில், “ஊருக்குள்ள சாமி இல்லன்னு சொல்லிட்டு இருந்த ராமசாமிதான நீ” என ஒருவர் கேட்கிறார். அதற்கு சந்தானம், “நான் அந்த ராமசாமி இல்லை” என பெரியாரைக் குறிப்பிடுவதுபோல் பதிவிட்டிருந்தார்.
இதனைக் கண்ட பலர், சந்தானத்தைக் கடுமையாக விமர்சித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்தவர் அப்பதிவை நீக்கியுள்ளார்.
சந்தானத்தின் புதிய திரைப்படமான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ பிப்.2 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.