செய்திகள்

பிரம்மாண்டமாக வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன்!

நடிகர் மோகன் லால் - லிஜோ ஜோஸ் பெல்லிசரி கூட்டணியில் உருவாகும் மலைக்கோட்டை வாலிபன் விரைவில் வெளியாகிறது.

DIN

மலையாளத்தில் சிறந்த கதைக்களங்களில் திரைப்படங்களை உருவாக்கி  கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி. இவரது ஜல்லிக்கட்டு படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இறுதியாக வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படமும் விமர்சன ரீதியில் பாராட்டுக்களைப் பெற்றது.

தற்போது, நடிகர் மோகன் லாலை வைத்து  ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுநீலகண்டன் ஒளிப்பதிவு செய்ய பிரசாந்த் பிள்ளை இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற ஜன.25 ஆம் தேதி வெளியாகிறது.

மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டீசரை வெளியாகி வரவேற்பைப் பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிக பொருள்செலவில் உருவான இப்படத்தை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் பல திரைகளில் வெளியாகக் காத்திருக்கிறது. மேலும், இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT