’தினசரி விட்டமின்கள்...’ வைரலாகும் மாளவிகா மோகனன்!
நடிகை மாளவிகா மோகனனின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பிரபல ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் படத்தில் மாளவிகாவின் நடிப்பு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் நடிகையாக மாளவிகா மோகனன் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது, பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், மாளவிகா தன் புதிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இவை, இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பகிர்ந்து வருவதால் மாளவிகாவின் ரசிகர்கள் ‘தினசரி விட்டமின்கள்’ என கிண்டலாக கருத்தும் தெரிவிக்கின்றனர்!