சூர்யா - 43 படத்தில் ஸ்ரீதேவியின் மகள்!
சூர்யாவின் 43வது படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 43வது படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தொடர்ந்து, வெற்றி மாறனின் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு புறநானூறு என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் படத்தின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை.
முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார். இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நடிகை நஸ்ரியா ஆகியோர் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம்.
இதையும் படிக்க: சலார் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
இந்த நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.