முகப்பு
செய்திகள்

எஸ்கே - 21 டீசர்: வியப்பில் இயக்குநர் நெல்சன்!

நடிகர் சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் டீசர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இயக்குநர் நெல்சன்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:16 PM
பகிர்:

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம்  வெற்றிப்படமாக அமைந்ததுடன் இதுவரை ரூ.70 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்ததாக, சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் மற்றும் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் பெயர் அறிவிப்பு டீசர் விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், இயக்குநர் நெல்சன் டீசரைப் பார்த்துள்ளார். 

இதுகுறித்து தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நெல்சன், “வாவ். இப்போதுதான் எஸ்கே - 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரைப் பார்த்தேன். சீற்றம் கொண்ட இந்த உணர்ச்சிப்பூர்வமான கதையில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் ராஜ்குமார் பெரியசாமி. எஸ்கே - 21 படக்குழுவுக்கு பெரிய பாராட்டுகள்” எனப் பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →