முகப்பு
செய்திகள்

பிரம்மயுகம் வெளியீட்டுத் தேதி!

மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மயுகம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:15 PM
பகிர்:

மம்மூட்டி நடித்துள்ள 'பிரம்மயுகம்' படத்தினை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார்.  நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படம் ஹாரர் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து, படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: துப்பறிவாளன் - 2 அப்டேட்!

இந்நிலையில், இப்படம் உலகம் முழுவதும் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வருகிற பிப்.16 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.