முகப்பு
செய்திகள்

மாதவன் படத்தில் ஜோதிகா!

பாலிவுட் படத்தில் நடிகை ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:15 PM
பகிர்:

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் ஜியோ பேபி, நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து ‘காதல் தி கோர்' என்கிற படத்தை இயக்கியிருந்தார். மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த நவ.23 ஆம் தேதி வெளியானது.

விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற காதல் படத்தில் நடிகை ஜோதிகாவின் நடிப்பும் பெரிதாகப் பேசப்பட்டது.

தொடர்ந்து, அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் ‘சைத்தான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 

மாதவன் - ஜோதிகா நடிப்பில் உருவான ‘டும் டும் டும்’, ‘பிரியமான தோழி’ ஆகிய படங்கள் வெற்றிப்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →