துப்பறிவாளன் - 2 அப்டேட்!
விஷால் நடிப்பில் உருவாக உள்ள துப்பறிவாளன் - 2 படம் குறித்து புதிய அப்டேட்.
2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். படத்தின் வெற்றி காரணமாக, இரண்டாம் பாக பணிகளில் மிஷ்கின் கவனம் செலுத்தினார். ஆனால், விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இப்படத்திலிருந்து மிஷ்கின் விலகினார். படம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் விஷால் தானே இயக்கி நடிக்க முடிவு செய்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
அதேநேரம், துப்பறிவாளன் - 2 படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, தன் அடுத்தடுத்த படங்களில் விஷால் கவனம் செலுத்தினார். அவர் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது. தற்போது, ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படிக்க: கங்கனாவின் எமர்ஜென்சி வெளியீட்டுத் தேதி!
இந்நிலையில், விஷால் இன்று எக்ஸ் தளத்தில் துப்பறிவாளனைக் குறிக்கும் புகைப்படத்தை முகப்புப் படமாக வைத்திருக்கிறார். இதனால், விஷால் துப்பறிவாளன் - 2 படத்தின் பணிகளை மேற்கொள்வார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.