செய்திகள்

ஃபைட்டர் டிக்கெட் விலை இவ்வளவா?

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான ‘ஃபைட்டர்’ திரைப்படம் நாளை (ஜன.25)  வெளியாகிறது.

DIN

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் இறுதியாக வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது, ஃபைட்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

பதான் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படம் நாளை (ஜனவரி 25)  உலகளவில் வெளியாகிறது. கதாநாயகியாக தீபிகா படுகோனும் முக்கிய கதாபாத்திரத்தில் அனில் கபூரும் நடித்துள்ளனர். 

வியோகாம் ஸ்டுடியோஸ், மார்ஃபிலிக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. 

இந்நிலையில், இப்படத்தின் பிவிஆர் டிக்கெட் விலைகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளன. தில்லி ஆம்பியன்ஸ் பிவிஏர் மாலில் இயக்குநர் கட் எனப்படும் சென்சாரில் துண்டிக்கபடாத ஃபைட்டர் படத்தின் ஒரு டிக்கெட் விலை ரூ.2400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிட்டி மாலில் மாலைக் காட்சிக்கான ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1850!

மேலும், மும்பை, கொல்கத்தாவில் உள்ள சில பிவிஆர் திரைகளிலும் முதல்நாளுக்கான டிக்கெட் விலைகள் ரூ.1700 க்கும் மேல் வசூலிக்கப்பட்டு வருகின்றன. பெங்களூரு, சென்னை பிவிஆரில் ரூ.600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால், ஹிருத்திக் ரோஷன் படங்களிலேயே இதுவே அதிக டிக்கெட் விலை கொண்ட திரைப்படம் என்கிற சாதனையையும் ஃபைட்டர் செய்திருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT