செய்திகள்

கிரிக்கெட் விளையாடும் பா.ரஞ்சித்: வைரல் விடியோ!

இயக்குநரும் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் கிரிக்கெட் விளையாடும் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

DIN

இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.

இதனை நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி தயாரான இப்படத்தின் அறிமுக விடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து, அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியனின் திருமணத்தை முன்னிட்டு ‘ரயிலின் ஒலிகள்’ பாடலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இப்பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

அடுத்து வெளியான இரண்டாவது பாடலான ‘அரக்கோணம் ஸ்டைல்’ என்கிற பாடலும் ஹிட்டடித்து. கோவிந்த் வசந்தா இசையில் அறிவு பாடிய இப்பாடல் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

படம் ஜன. 25ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. திரையரங்கு உரிமத்தினை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் கிரிக்கெட் விளையாடிய பா. ரஞ்சித்தின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வேகப் பந்து வீச்சாளர், தொடக்க வீரர் என பா. ரஞ்சித் தனது கிர்க்கெட் அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார் படத்துக்கு புரமோஷன் செய்யும் விதமாக இந்த விடியோ வெளியாகியுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி, அசோக் செல்வன் ஆகியோர் இந்த விளையாட்டில் கலந்து கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயிலர் - 2 படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு!

இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

“தலைவர பக்கத்துல பாக்கதான் வந்துருக்கோம்!” தவெக தொண்டர்கள் பேட்டி! | Madurai | Vijay

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

SCROLL FOR NEXT