முகப்பு
செய்திகள்

தக் லைஃப் படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக அறிவிப்பு.

Updated On : 24 ஜனவரி, 2024 at 1:23 PM
பகிர்:

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

தக் லைஃப் அறிமுக விடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு  இன்று துவங்கியுள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.