இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி!
இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மனசுக்கேத்த மன்னாரு படத்தில் 1986ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. அவர் பல்வேறு முன்னணி நடிகர் படங்களுக்கு இசையமைத்து பாடல் பாடியும் இருக்கிறார்.
இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் இவர் பாடிய ‘ஜித்து ஜில்லாடி’ பாடல் மிகவும் பிரபலமானது. இவர் கடைசியாக 2021இல் சில்லு வண்டுகள் படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
2022ஆம் ஆண்டு நம்பரில் இசையமைப்பாளர் தேவா எக்ஸில் இணைந்தார். தற்போது தொடர்சியான தனது அப்டேட்டுகளை தனது எக்ஸ் பக்கத்தில் கூறி வருகிறார்.
Advertisement
Advertisement
தற்போது முதன்முறையாக கோயம்புத்தூரில் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறதென அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.13ஆம் தேதி ஒடிசா மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயண்ட் ஃபிலிம்ஸ், ஏஎல்விஐ டிஜிடெக் பிரைவேட் லிமிடெட் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிக்கு “கொஞ்சநாள் பொறு தலைவா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.