செய்திகள்

ஜிவி பிரகாஷின் ரிபெல் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ஜிவி பிரகாஷ் குமார் நடித்துள்ள ரிபெல் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஜிவி பிரகாஷ் குமார் நடித்துள்ள ரிபெல் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில் கேப்டன் மில்லர் சமீபத்தில் வெளியானது. டைகர் நாகேஸ்வர ராவ், வணங்கான் ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

இவர் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான ‘அடியே’ திரைப்படம், கலவையான விமரிசனங்களைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் நிக்கேஷ் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் ரிபெல் என்ற படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடித்து முடித்துள்ளார்.  இப்படத்துக்கு சென்சார் குழு யு/ஏ சான்றிதழை வழங்கியது.

இந்த நிலையில், ரிபெல் திரைப்படம் வரும் மார்ச் 22 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மீட்புப் பணியின்போது மீண்டும் தாக்குதல்!

ஆக. 28 ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி: ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் முதல்முறையாக இருதரப்பு பேச்சு!

வெவ்வேறு நட்சத்திரங்களில் நின்ற "சனி" தரும் பலன்கள் என்னென்ன?

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜாமீன்!

கவின் கொலை வழக்கு: நீதிமன்றக் காவல் 15 நாட்கள் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT