செய்திகள்

கமல் - ஹெச். வினோத் படம் என்னானது? தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவல்!

DIN

நடிகர் கமல் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகவிருந்த திரைப்படத்தின் முக்கிய தகவலை ராஜ்கமல் இண்டர்நெஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் கமலின் சினிமா பயணம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. 

இயக்குநர் சங்கரின் இந்தியன் 2,  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர் கமல் நடித்து வருகிறார். சமீபத்தில் கமலின் 237வது படத்தினை அன்பறிவ் சகோதர்கள் இயக்குகிறார்கள் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இப்படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இதனிடையே கமலின் 233-வது படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடியோவை கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நெஷனல் முன்னதாக வெளியிட்டிருந்தது.

‘ரைஸ் டூ ரூல்’(rise to rule) என்கிற தலைப்பில் வெளியான காட்சிகளால் இப்படம் அரசியல் படம் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நெஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் எஸ்கே 21, சிம்புவின் எஸ்டிஆர் 48, தக் லைஃப், கமல் 237 என்ற திரைப்படங்கள் மட்டுமே தயாரிப்பில் உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.

ராஜ்கமல் இண்டர்நெஷனல் நிறுவனத்தின் அறிவிப்பில் ஹெச். வினோத்தின் திரைப்படம் குறித்த எந்த தகவலும் தெரிவிக்காததால் இப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. 

இயக்குநர் ஹெச். வினோத், தற்போது யோகி பாபு நடிக்கும் படம் ஒன்றை இயக்க இருப்பதாவும், இதனைத் தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் 2 ஆம் பாகத்தையும் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

SCROLL FOR NEXT