செய்திகள்

இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும்: கமல்ஹாசன்

DIN

இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி (47) உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் வியாழக்கிழமை காலமானாா். 

பவதாரணி உடல்நலப் பாதிப்புக்காக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இலங்கையில் ஆயுா்வேத மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இன்று மாலை அவரது உடல் சென்னை கொண்டுவரப்படவுள்ளது. 

பவதாரணியின் குரலின் தனித்தன்மையே அவரை தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும். ‘அழகி’ திரைப்படத்தில் இவா் பாடிய ‘ஒளியிலே தெரிவது தேவதையா....’ என்ற பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.  தொடா்ந்து, இவா் பாடிய பல பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இளையராஜா இசையில் ‘பாரதி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மயில் போல பொண்ணு ஒன்னு...’ பாடலுக்காக பவதாரணிக்கு தேசிய விருது கிடைத்தது.

பவதாரிணி இறப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன், “மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்” எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

SCROLL FOR NEXT