செய்திகள்

சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண்: தெலுங்கு பிரபலங்கள் வாழ்த்து மழை!

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷண் விருது பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

DIN


தமிழகத்தைச் சோ்ந்த ஏழு பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவா்களில் பத்ம விபூஷண் இருவருக்கும், பத்ம பூஷண் ஒருவருக்கும், பத்மஸ்ரீ 4 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைத் துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக வைஜெயந்தி மாலா, பத்மா சுப்பிரமணியம், சிரஞ்சீவி, விஜயகாந்துக்கும், பொது விவகாரங்களில் சிறப்பாக சேவைபுரிந்தற்காக வெங்கையா நாயுடுக்கும் இந்த விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த விருது அறிவிப்புக்கு வார்த்தைகளே இல்லை என சிரஞ்சீவி நெகிழ்ச்சியாக விடியோ வெளியிட்டுள்ளார். தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

இயக்குநர் ராஜமௌலி, ”இந்தியாவின் மிக உயர்ந்த 2வது விருதினை பெரும் சிரஞ்சீவியின் சினிமா பயணம் பல தலைமுறைகளுக்கு உத்வேகமளிக்கும். பத்ம விபூஷணுக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார். 

நடிகர் ஜுனியர் என்.டி.ஆர்., “வெங்கையா நாயுடு, சிரஞ்சீவி இருவருக்கும் வாழ்த்துகள். மேலும் பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார். 

நடிகர் ரவிதேஜா, “பத்மவிபூஷண் மாஸ்டர் சிரஞ்சீவி. வாழ்த்துகள் அண்ணா. லவ் யூ” எனப் பதிவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT