ரோஜா தொடரில் சிபு மற்றும் பிரியங்கா. 
செய்திகள்

ரோஜா தொடர் நாயகனின் புதிய தொடர்!

ரோஜா தொடரில் நடித்த சிபு சூர்யனின் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

ரோஜா தொடரில் நடித்த சிபு சூர்யனின் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரோஜா தொடரில் அர்ஜூன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் இடையே பிரபலமானவர் சிபு சூர்யன். இத்தொடரில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார் சிபு.

இத்தொடரை தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா -2 தொடரில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக விணுஷா தேவி நடித்திருந்தார். ஆனால் இத்தொடர் குறைந்த எபிசோடுகளுடன் குறுகிய காலத்திலேயே நிறைவடைந்தது.

இந்த நிலையில் சிபு சூர்யன் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் இணைந்துள்ளார். இத்தொடருக்கு சிவமுருகன் டெக்ஸ்டைல்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இத்தொடரில் சிபுவுக்கு ஜோடியாக பேரண்பு தொடரில் நடித்த வைஷ்ணவி நடிக்கவுள்ளார். மேலும், சிவமுருகன் டெக்ஸ்டைல்ஸ் தொடரின் ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT