முகப்பு
செய்திகள்

கவனம் ஈர்க்கும் லவ்வர் படத்தின் புதிய பாடல்!

லவ்வர் படத்திலிருந்து வெளியான புதிய பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

செய்திகள்

கவனம் ஈர்க்கும் லவ்வர் படத்தின் புதிய பாடல்!

லவ்வர் படத்திலிருந்து வெளியான புதிய பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:12 PM
பகிர்:

லவ்வர் படத்திலிருந்து வெளியான புதிய பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக  நடித்து வெற்றி பெற்றார். தற்போது, மணிகண்டன் 'லவ்வர்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதில் கெளரி பிரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.  படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கிறது. 

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வருகிற பிப்.9 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லவ்வர் படத்தின் புதிய பாடலான வாடி என் ட்ரிப் என்ற பாடல் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. இப்பாடலை ஆஃப் ரோ பாடியள்ளார். பாடல் வரிகளை ஷான் ரோல்டன் எழுதியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →