செய்திகள்

ஹனுமான் ஓடிடியில் எப்போது?

DIN

ஹனுமான் திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமான்.   

தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் ஹனுமான் திரைப்படம் உலகளவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். 

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் கே. நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை தயாரித்துள்ளார். ஸ்ரீமதி சைதன்யா இப்படத்தை வழங்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 12 ஆம் தேதி வெளியானது.

ஹனுமான் திரைப்படம் 5 நாள்களில் ரூ. 120 கோடியை தாண்டி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், ஹனுமான் திரைப்படம் ஜீ 5 ஓடிடியில் வரும் மார்ச் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்! -திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக் கட்டுப்பாடு அமல்

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறையினர் சோதனை

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்கினீர்கள்? ராகுல்

அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

SCROLL FOR NEXT