ரசிகர்களுடன் கார்த்தி!
’96’ இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘96’.
பள்ளியிலிருந்து பேரிளம் பருவம் வரை தொடரும் நாயகனின் காதலை பல உணர்ச்சிகளுடன் இயக்குநர் பிரேம் குமார் உருவாக்கியிருந்தார்.
அப்படத்தில் இடம்பெற்ற ‘காதலே..காதலே’, ‘லைப் ஆஃப் ராம்’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே பரவலாக கேட்கப்பட்டு வருகிறது. ஆறு ஆண்டுகளுக்குப் பின் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இது, கார்த்தியின் 27-வது படமாகும்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தில் தங்கலான்!
இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.இப்படத்திற்கு ‘மெய்யழகன்’ எனப் பெயரிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், படப்பிடிப்பின்போது ரசிகர்கள் கார்த்தியைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.