செய்திகள்

பின்லாந்தில் சூர்யா - ஜோதிகா: வைரல் விடியோ!

பின்லாந்தில் சூர்யா மற்றும் ஜோதிகா புத்தாண்டை கொண்டாடிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN

பின்லாந்தில் சூர்யா மற்றும் ஜோதிகா புத்தாண்டை கொண்டாடிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தொடர்ந்து, வெற்றி மாறனின் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு புறநானூறு என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் படத்தின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை. 

நடிகை ஜோதிகா சமீபத்தில் மம்மூட்டியின் ‘காதல் தி கோர்' என்கிற படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் ‘சைத்தான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

இந்த நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகா புத்தாண்டை பின்லாந்தில் கொண்டாடியுள்ளனர். உறைபனியில் இருவரும் குடும்பத்துடன் விளையாடி மகிழும் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT