செய்திகள்

சார்பட்டா - 2 பணிகள் துவக்கம்! பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

ஆர்யா நடிக்கவுள்ள சார்பட்டா - 2 திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது.

DIN

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021-ல் ஓடிடியில் நேரடியாக வெளியானாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதிலும் நாயகனாக ஆர்யாவே நடிக்கிறார்.

இதற்காக, ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இயக்குநர் பா.இரஞ்சித்தும் தற்போது தங்கலான் இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தியுள்ளார். 

இந்நிலையில், சார்பட்டா - 2 படத்திற்காக ஆர்யா குத்துச்சண்டைப் பயிற்சியைத் துவங்கியுள்ளதாகத் வெரிவித்துள்ளார். இப்படத்திற்கான முதல்கட்ட பணிகளையும் படக்குழு துவங்கியுள்ளனர். முக்கியமாக, இந்த இரண்டாம் பாகம் ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். காரணம், சார்பட்டா முதல் பாகம் ஓடிடியில் வெளியாகி திரையரங்க வசூலைத் தவறவிட்டிருந்தது.

அதனால், இந்த முறை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிட பா.இரஞ்சித் முடிவு செய்துள்ளார். தங்கலான் வெளியீட்டுக்குப் பின் பா.இரஞ்சித் சார்பட்டா படப்பிடிப்பை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

SCROLL FOR NEXT