செய்திகள்

மம்மூட்டி எடுத்த புகைப்படம் ரூ. 3 லட்சத்துக்கு ஏலம்!

DIN

நடிகர் மம்மூட்டி எடுத்த புகைப்படத்தைத் தொழிலதிபர் ஏலம் எடுத்துள்ளார்.

நடிகர் மம்மூட்டி நடிப்பில் இறுதியாக வெளியான டர்போ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.80 கோடி வரை வசூலித்தது.

தொடர்ந்து, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. இதில், அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

படப்பிடிப்பு ஓய்வின்போது மம்மூட்டி கார்கள் ஓட்டுவதும் விலையுயர்ந்த கேமராக்களில் புகைப்படம் எடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். சக நடிகர்கள், இயற்கைக் காட்சிகளை படமெடுத்து மகிழும் மம்மூட்டி சமீபத்தில் புல்புல் பறவையொன்றை புகைப்படம் எடுத்துள்ளார்.

பலரின் பாராட்டுகளைப் பெற்ற இப்புகைப்படம் மறைந்த பறவையியலாளரும், எழுத்தாளருமான கே.கே.நீலகண்டன் என்ற இந்துச்சூடனின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கொச்சியில் நடந்த புகைப்படக் கண்காட்சியில் வைக்கப்பட்டது.

அப்போது, மம்மூட்டி எடுத்த இந்தப் புகைப்படத்தை தொழிலதிபர் ஒருவர் ரூ.3 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தார். இதை, அவர் துவங்கவுள்ள ஹோட்டலில் வைக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT