நடிகர்கள் பினு பப்பு, மோகன்லால் படம்: இன்ஸ்டா / பினு பப்பு
செய்திகள்

30 ஆண்டுகளுக்கு முன்பும் தற்போதும்..! மோகன்லாலுடன் எடுத்த புகைப்படம் வைரல்!

மலையாள நடிகர் மோகன்லால் உடன் முப்பதாண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

DIN

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான  ‘நெரு’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.

இதற்கடுத்து வெளியான 'மலைக்கோட்டை வாலிபன்' எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

மோகன்லாலின் 360வது படத்தை 'ஆப்ரேஷன் ஜாவா', 'சவுதி வெள்ளக்கா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக எல்360 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகை ஷோபானா நடிக்கிறார். 1985இல் முதன்முதலாக மோகன்லால்- ஷோபனா இணைந்து அவிடத்தி போலே இவிடேயும் என்ற படத்தில் நடித்தார்கள். கடைசியாக 2004இல் மாம்பழக்காலம் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். தற்போது மீண்டும் 56ஆவது முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

தற்போது இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் பினு பாப்பு நடிக்கிறார். இவர் ஏற்கனவே 1994இல் மோகன்லாலுடன் எடுத்த புகைப்படத்தினையும் தற்போது எடுத்த புகைப்படத்தினையும் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில், “முப்பதாண்டுகள் கடந்துவிட்டன! இருப்பினும் அதே நவீனம் மாறாமல் இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக நிறைவு!

காந்தாரா சாப்டர் - 1 காட்சிகளை யாரும் பகிர வேண்டாம்; சுவாரசியம் போய்விடும்! -படக்குழு வேண்டுகோள்

வெண்பனியே... ராஷி கன்னா!

மேகமோ அவள்... பிரியங்கா மோகன்!

பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT