செய்திகள்

ரூ.100 கோடி பட்டியலில் இணைந்த விஜய் சேதுபதி!

DIN

நடிகர் விஜய் சேதுபதி ரூ.100 கோடி வசூலித்த நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆண்டிற்கு இரண்டு படங்களாவது ரூ.100 கோடி வசூலை அடைந்துவிடும். அதிலும், பெரிய நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் ரூ.200 கோடிக்கும் அதிகமாகவே வசூலை ஈட்டுபவை.

அந்த வகையில், தென்னிந்திய சினிமாவிலேயே முதல் ரூ.100 கோடியை வசூலித்த நடிகர் என்கிற பெருமையைப் பெற்றவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படமே இச்சாதனைக்கு வழிவகுத்தது.

தொடர்ந்து, கமல்ஹாசன் (தசாவதாரம்), விஜய் (துப்பாக்கி), அஜித்குமார் (ஆரம்பம்), விக்ரம் (ஐ), சூர்யா (சிங்கம் 2), தனுஷ் (அசுரன்), சிம்பு (மாநாடு), கார்த்தி (கைதி), சிவகார்த்திகேயன் (டாக்டர்), பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே), விஷால் (மார்க் ஆண்டனி) ஆகியோர் இப்படங்களின் மூலம் தங்களின் முதல் ரூ.100 கோடி வசூலை அடைந்தனர்.

இந்த நிலையில், மகாராஜா படத்திற்காக ரூ.100.8 கோடி வசூலித்து இப்பட்டியலில் நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT