இந்தியன் - 2 படத்தை தணிக்கை வாரியத்தினர் பாராட்டினர்: கமல்ஹாசன்
இந்தியன் - 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்தியன் - 2 படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்களின் விடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. இப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், இன்று நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், “இந்தியன் - 2 திரைப்படம் நன்றாக வந்துள்ளது. எனக்கு இந்தியன் - 3 தான் பிடித்திருக்கிறது எனச் சொன்னது பலராலும் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இது, குழந்தையிடம் அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமா எனக் கேட்பதுபோல் இருக்கிறது. எனக்கு மூன்றாம் பாகத்தில் பிடித்தமான காட்சிகள் அதிகம் இருப்பதால் அதைச் சொன்னேன். இந்தியன் - 2 படத்தைப் பார்த்தத் தணிக்கை வாரியத்தினர் பாராட்டியுள்ளனர்.” எனக் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.