செய்திகள்

தொழிலில் கவனம் செலுத்தும் நயன்தாரா!

DIN

நடிகை நயன்தாரா தன் நிறுவனத் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி வருகிறார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர். அவர்களது குழந்தைகளுக்கு உயிர், உலக் என வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.

இக்குழந்தைகளின் புகைப்படங்களையும், காணொளிகளை அடிக்கடி இருவரும் சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருவது வழக்கம்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, மண்ணாங்கட்டி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதேநேரம், ஃபெமி 9 (femi 9) என்கிற பெண்களுக்கான அழுகு சாதனப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அடிக்கடி, தன் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி சந்தையில் தங்கள் நிறுவனத்தையும் பெரிதாகக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளைச் செய்கிறார்.

அந்த வகையில், இன்று விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆவேஷம் திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசில் செய்யும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸைப் போன்றே இவரும் செய்து தன் பொருளை விற்க விளம்பரம் செய்கிறார். உச்ச நடிகையாக இருந்தாலும் தொடர்ந்து தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறார் நயன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

SCROLL FOR NEXT