இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ளார்.
கல்கி, சலார் படங்களின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிந்ததும் பிரபாஸ் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா திரைப்படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் போலீஸ் கதையாக உருவாகிறது. சந்தீப் ரெட்டி வங்காவின் அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சந்தீப் - பிரபாஸ் இணைகிற படத்தின் வில்லனாக பிரபல தென் கொரிய நடிகர் மா டாங் சியோக் (ma dong seok) நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொரியன் ஆக்சன் படங்களில் நாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்றவர் மா டாங். இவர் நடிப்பில் வெளியான , ‘தி கேங்ஸ்டர் தி காப் தி டெவில் (the gangster the cop the devil)’ திரைப்படம் உலகளவில் கவனம் பெற்றது.
தற்போது, பான் ஆசியன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் இவர் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் இப்படம் இந்திய மொழிகளுடன் ஜப்பான் மற்றும் கொரிய மொழிகளிலும் தயாராகும் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.