இளையராஜா இசையமைப்பில் ஜமா! போஸ்டர் வெளியீடு!
ஜமா திரைப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜமா. தெருக்கூத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை பாரி இளவழகன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
கூழாங்கல் படத்தை தயாரித்த லெர்ன் அண்ட் டெக் புரோடக்ஷன் நிறுவனம் ஜமா படத்தை தயாரித்துள்ளது.
இதில், அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.