செய்திகள்

எங்களுக்கு அறிவு வளர்ந்த நாள்.. கே.பாலசந்தரை நினைவு கூர்ந்த கமல்!

DIN

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் பிறந்த நாளில் அவரை நடிகர் கமல்ஹாசன் நினைவு கூர்ந்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி திரைப்படம் ரூ.900 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஜூலை 12 ஆம் தேதி அவர் நாயகனாக நடித்த இந்தியன் - 2 திரைப்படம் திரைக்கு வருகிறது.

தற்போது, அதன் புரோமோஷன்களில் கலந்துகொண்டு படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவுகூறும் விதமாக நடிகர் கமல்ஹாசன் விடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், ”நான் அவரைப் பற்றி பேசாத நாளே இல்லை. என் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்தார் என்பதற்காக மட்டும் போற்றப்பட வேண்டியர் அல்ல. தனக்குப் பயனில்லை என்ற நிலையிலும் என்னைப்போல் பல நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர். அந்தளவிற்கு, விடாமுயற்சியாக புதுமைகளையும், புதுமுகங்களையும் அறிமுகப்படுத்திய வேறு இயக்குநர் என் நினைவிற்கு வரவில்லை. என்னைப்போல் பல கலைஞர்களை உருவாக்கி எங்களுடனே இருக்கிறார். இன்று அவருக்குப் பிறந்த நாள். எங்களுக்கு இத்துறையில் அறிவு வளர்ந்த நாள்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்ப அதிர்ச்சி... ரெஜினா!

ஜிஎஸ்டி குறைத்ததற்கான பாராட்டுக்கு மோடி உரிமை கோருவதா?: மம்தா பானா்ஜி

முஸ்லிம்களுக்கு ஆதரவாக முதலில் வந்து நிற்கும் கட்சி திமுக! -முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆசிய கோப்பை பவர்-பிளேயில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த பாக்.!

கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தர்மேந்திர பிரதான்

SCROLL FOR NEXT