தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகை!
சப்த சாகரதாச்சே எல்லோ படத்தில் பிரபலமான கன்னட நடிகை தமிழில் அறிமுகமாகவிருக்கிறார்.
சமீபத்தில் கன்னடத்தில் சப்த சாகரதாச்சே எல்லோ- சைடு ஏ, சைடு பி என இரண்டு பாகங்களாக திரையரங்குகளில் வெளியான படம் நல்ல வரவேற்பினை பெற்றது.
தொடர்ந்து ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பின் இந்திய அளவில் இப்படம் கவனம் ஈர்த்துள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த இயக்குநர் ஹேமந்த் ராவ் இயக்கத்தில் சிவராஜ் குமார் இணைந்து நடிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சைடு பி படத்தில் சுரபி கதாபாத்திரத்தில் நடித்த கன்னட நடிகை சைத்ரா ஜே. ஆச்சார் எனும் நடிகை கன்னட, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் கவனம் பெற்று வருகிறார். குறிப்பாக தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தென்னிந்தியாவின் ஆலியா பட் என வர்ணித்து வருகிறார்கள்.
Advertisement
இந்நிலையில் தற்போது தமிழில் அறிமுகமாவுள்ளார். சசிகுமார் ராஜூ முருகன் படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. இதைத் தவிர்த்து மற்றுமொரு தமிழ்ப் படத்திலும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நடிகை சைத்ரா ஜே. ஆச்சார் கன்னடத்தில் உத்ரகண்டா படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ளது.