ஆன்மிக பயணத்தில் நடிகை சைத்ரா ரெட்டி!
சின்ன திரை நடிகை சைத்ரா ரெட்டி ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளது குறித்து...
சின்ன திரை நடிகை சைத்ரா ரெட்டி ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சைத்ரா ரெட்டி, சாமி தரிசனம் செய்துள்ளர்.
படப்பிடிப்புகளுக்கு மத்தியில் ஓய்வு நேரங்கள் கிடைக்கும்போதெல்லாம் இயற்கை சூழல் சார்ந்து பயணம் மேற்கொள்ளும் சைத்ரா ரெட்டி, சமீப காலங்களாக ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார்.
சன் தொலைக்காட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கயல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர், 4 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக மக்கள் ஆதரவைப் பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்தத் தொடரில் சைத்ரா ரெட்டி நாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகர் சஞ்ஜீவ் நடித்து வருகிறார். இவர்களுடன், நடிகைகள் மீனா குமாரி, வடிவுக்கரசி, அபிநவ்யா உள்ளிட்ட பல முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
கயல் தொடரில் சைத்ரா ரெட்டியின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதால், உரிய அங்கீகாரமும் அவருக்கு கிடைத்து வருகிறது. கயல் தொடரில் தனது நடிப்புக்காக பல விருதுகளையும் வென்றுள்ளார்.
இத்தொடருக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக சைத்ரா நடித்திருந்தார்.
தற்போது நாயகியாக கலக்கிக்கொண்டிருக்கும் சைத்ரா, சமீப காலங்களாக அடிக்கடி ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இவர் நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான விடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் சைத்ரா பகிர்ந்துள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவண்ணாமலை கோயிலுக்கு வந்திருந்தார். தற்போது அடிக்கடி சைத்ராவை திருவண்ணாமலையில் பார்க்க முடிவதாக ரசிகர்கள் கருத்திடுகின்றனர்.
Kayal Serial Actress Chaitra Reddy on a Spiritual Journey spotted in thiruvannaamalai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.