செய்திகள்

தங்கலான் டிரைலர் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

DIN

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைக் கொடுத்தது. ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் படத்தின் தூணாக இருந்தார்.

தொடர்ந்து, தங்கலான் படத்தில் இணைந்தார். கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்ததால் பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சில காரணங்களால் தள்ளிச்சென்றது. மேலும், ஜூன் மாதம் வெளியாகும் என கூறப்பட்டது. மீண்டும் இறுதிக்கட்ட பணிகளின் தாமதத்தால் படக்குழு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு தங்கலான் டிரைலர் வெளியாகிறது. நீண்ட நாள் தயாரிப்புக்குப் பின் வெளியாகும் டிரைலர் என்பதால் விக்ரம் மற்றும் பா.இரஞ்சித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ், ஓபிஎஸ் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய செங்கோட்டையன்!

5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி: தொடரை வென்றது தெ.ஆ.!

கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!

ஆசிரியர் நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

பிரிந்தவர்களை 10 நாள்களில் இணைக்க வேண்டும்: செங்கோட்டையன் காலக்கெடு!

SCROLL FOR NEXT