முகப்பு
செய்திகள்

கவிஞரான மோகன்லால் மகன்!

Updated On : 11 ஜூலை, 2024 at 11:16 AM
பகிர்:

நடிகர் பிரணவ் மோகன்லால் தன் முதல் கவிதை தொகுப்பை வெளியிட உள்ளார்.

நடிகர் மோகன்லாலில் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் ஹிருதயம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார்.

தொடர்ந்து, வர்ஷங்களுக்கு ஷேஷம் திரைப்படத்தில் நாயகனாக நடித்து அதிலும் வெற்றிபெற்றார். அதேநேரம், குறைவான படங்களிலேயே நடிக்கும் பிரணவ், உலகம் முழுவதும் சுற்றும் பயணியாகவும் இருக்கிறார்.

எப்போதும் வெளிநாட்டு பயணங்களிலேயே இருப்பதும் அங்கு இசைக்கருவிகளை வாசித்து எளிமையான வாழ்க்கையை வாழ்வதையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார்.

இந்த நிலையில், பிரணவ் தன் முதல் கவிதை தொகுதியை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். ‘லைக் டெசர்ட் டியூன்ஸ் (like desert dunes)’ என புத்தகத்திற்குத் தலைப்பு வைத்துள்ளார்.

மோகன்லாலில் மகள் விஸ்மயாவும் கவிஞராக அறியப்படுகிறார். 2021-ல் அவர் எழுதிய கவிதைகள் கிரைன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட் (grains of stardust) என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →