இது பிரியா பவானி சங்கரின் கதறல்ஸ்...! கிண்டல்களுக்கு பதிலளித்த நடிகை!
நடிகை பிரியா பவானி சங்கர் மீம்ஸ்களுக்கு பதிலளித்துள்ளார்.
நடிகை பிரியா பவானி சங்கர் தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார். செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்த இவர், மேயாத மான் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, பத்து தல, ரத்னம் என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா மட்டுமல்லாது சென்னையில் உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
பிரியா பவானி சங்கர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் கலமையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் கிண்டல் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.
Advertisement
Advertisement
இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கரை கிண்டல் செய்து பதிவிட்ட பதிவில் அவர் பதிலளித்துள்ளார். அதில், “அடப்பாவிங்களா இது ஜஸ்ட் கதறல்ஸ் பாடலில் பிரியா பவானி சங்கர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகையின் பெருந்தன்மையான மனப்பான்மை குறித்து ரசிகர்கள் நெகிழ்ச்சியாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.