நடிகர் விஜய்யை சந்தித்த ரம்பா!
நடிகர் விஜய்யை தனது குடும்பத்துடன் சென்று சந்தித்துள்ளார் நடிகை ரம்பா.
தமிழ் சினிமாவில் 1990, 2000ங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா. உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நாயகியாக அறிமுகமான இவர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
தொழிலதிபர் இந்திரக்குமார் உடன் 2010இல் திருமணம் நடைபெற்றது. பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகினார். தொலைக்காட்சி தொடர்களில் நடுவராக பங்கேற்று வந்தார்.
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் ஒரு படத்துடன் சினிமாவிலிருந்து விலகி அரசியலில் ஈடுபடவிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்சியின் முதல் மாநாடு விரைவில் நடக்கவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
இந்நிலையில் நடிகர் விஜய்யை தனது குடும்பத்துடன் சென்று சந்தித்துள்ளார் ரம்பா. விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கனடாவில் வசிக்கும் ரம்பா தனது குடும்பத்துடன் விஜய்யை சந்தித்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “பல ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.