முகப்பு
செய்திகள்

ஓடிடியிலும் வரவேற்பைப் பெற்ற மகாராஜா!

Updated On : 18 ஜூலை, 2024 at 11:42 AM
பகிர்:

மகாராஜா திரைப்படம் ஓடிடி வெளியீட்டிலும் கவனம் பெற்றுள்ளது.

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

திரையரங்க வெளியீட்டிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது.

தொடர்ந்து, மகாராஜா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஜூலை 12 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியானது.

இந்த நிலையில், ஓடிடி வெளியீட்டிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிகள் பலரையும் பாதித்தது சமூக வலைதள விமர்சங்களில் காண முடிகிறது. மேலும், நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த வார வெளியீட்டிலிருந்து இந்தியளவில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா முதல் இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.